தூத்துக்குடி தேர்தல் வழக்கு தொடர்பாக கனிமொழி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி தேர்தல் வழக்கு, கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2022-07-21 03:43 GMT

புதுடெல்லி,

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி, தனது வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அந்த தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க ஐகோர்ட்டு மறுத்தது. இதற்கு எதிராக கனிமொழி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுவை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி அளித்த தீர்ப்புக்கும், விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது. இந்தநிலையில், கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வில் சந்தானகுமார் தரப்பு வக்கீல் எஸ். நாகேஷ் முறையிட்டார்.

இதனை பரிசீலித்த நீதிபதிகள், தூத்துக்குடி தேர்தல் வழக்கு, கனிமொழியின் மேல்முறையீட்டு மனுவை அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்