மூளைக்கும், நாக்கிற்கும் தொடர்பு இல்லாமல் பேசுகிறார்- ரமேஷ்குமார் மீது குமாரசாமி கடும் விமர்சனம்

மூளைக்கும், நாக்கிற்கும் தொடர்பு இல்லாமல் பேசுகிறார் என்று ரமேஷ்குமார் மீது குமாரசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-08-07 17:21 GMT

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் எங்கள் குடும்பத்தை விமர்சித்துள்ளார். அவரது மூளைக்கும், நாக்கிற்கும் தொடர்பு இல்லாதது போல் பேசுகிறார். அதனால் அவர் சகஜமில்லாத கருத்துகளை கூறுகிறார். அவ்வாறான அவரது கருத்துக்கு முற்றுப்புள்ளி இல்லாத நிலை நீடித்து வருகிறது. சோனியா காந்தியால் பல தலைமுறைக்கு தேவையான சொத்துகளை சேர்த்துள்ளதாக அவரே ஒப்பு கொண்டுள்ளார்.

அவ்வாறு சேர்த்த சொத்துகளில் எத்தினஒலே, கே.சி.வேலி திட்டங்களும் அடங்குகிறதா?. கோலார் மாவட்டத்திற்கு ரமேஷ் குமார் செய்த மிக மோசமான அநீதி அனைவரின் கண்முன்னே உள்ளது. பெண்கள் குறித்து மோசமான கருத்து கூறியதால் சொந்த கட்சியை சேர்ந்த சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்களே போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சொல்ல வேண்டுமா?. கலாசாரம் இல்லாத நாக்கே உன்னுடைய மோசமான பழக்கத்தை கைவிடு என்று எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த கருத்து ரமேஷ்குமாருக்கு பொருந்தும்.

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்