மாடுகளுடன் தகாத உறவு கொண்டதுடன் வால்களை வெட்டிய வாலிபர் கைது
மாடுகளுடன் தகாத உறவு கொண்டதுடன் வால்களை வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் வால்களை மர்மநபர்கள் வெட்டி சென்று இருந்தனர். இதுகுறித்து கால்நடை ஆர்வலர்கள் அளித்த புகாரின்பேரில் சந்திரா லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் மாடுகளின் வால்களை வெட்டியதாக மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாடுகளுடன் தகாத உறவு கொள்ளும் பழக்கம் உடைய மஞ்சுநாத், மாடுகளுடன் தகாத உறவு கொண்ட பின்னர் மாடுகளின் வால்களை வெட்டி செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்து உள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.