காங்கிரசில் இருந்து விலகிய ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைகிறாா்

பிரதமர் மோடியின் தலைமையில் தேச சேவைக்காக பாடுபடுவேன்.

Update: 2022-06-02 04:44 GMT

அகமதாபாத்,

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19ஆம் தேதி தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ளார். குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் பட்டேல் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைகிறார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், தேச நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் தேசத்திற்கு சேவை செய்யும் உன்னத பணியில் நான் ஒரு சிறிய சிப்பாயாக பணியாற்றுவேன் என அவா் பதிவிட்டுள்ளாா்.

Tags:    

மேலும் செய்திகள்