ரோந்து பணி பொறுப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒப்படைப்பு

பெங்களூருவில் ஒய்சாலா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் பொறுப்ப உதவி சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-03 21:28 GMT

பெங்களூரு:-

ஒய்சாலாவில் போலீசார் ரோந்து

பெங்களூருவில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போலீசாருக்கு என்று ஒய்சாலா வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை அறை மற்றும் 112-க்கு ஏதேனும் குற்றம் நடந்திருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒய்சாலா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அதன்படி, அவர் உடனடியாக சென்று விசாரணை நடத்துவார். மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார். இதுபோன்று ஒய்சாலா வாகனத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் தங்களது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்ற வண்ணம் இருப்பார்கள். ஆனால் சமீபமாக உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணியில் ஈடுபடாமல், மற்ற போலீஸ்காரர்கள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

உதவி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பொறுப்பு

இதுபற்றி போலீஸ் கமிஷனர் தயானந்த் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து, ஒய்சாலா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் பொறுப்பை உதவி சப்-இன்ஸ்பெக்டர்களிடம் ஒப்படைத்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒய்சாலா வாகனத்தில் கண்டிப்பாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் தான் செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் 45 வயதுக்கு குறைவானவர்களாக இருக்க வேண்டும்.

ஏதாவது போலீஸ் நிலையங்களில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் இல்லாமல் இருந்தால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஒய்சாலா வாகனத்தில் ரோந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தான் ஒய்சாலா வாகனத்தில் ரோந்து செல்ல உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் சரியாக வார விடுமுறை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக போலீசார் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்