இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் சரிந்து விழும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் - வீடியோ

இமாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2023-08-16 05:16 GMT

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சிம்லா, மண்டி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், சிம்லா, மண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லும் காட்சி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எப்), மாநில பேரிடர் மீட்புப் படையினர் (எஸ்டிஆர்எப்), ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவினால் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலத்தில் பருவமழை தொடங்கிய கடந்த ஜூன் 24 முதல் ஆகஸ்டு 14 வரை மொத்தம் ரூ.7,171 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமார் 9,600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்