பாலிதீன் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்
உப்பள்ளியில் பாலிதீன் பைகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் ஜனதா பஜார் பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பின்னா் அங்குள்ள கடைகள், ஓட்டல்களில் அதிரடியாக சோதனை செய்தனர். இதில் சுமார் 60 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த 60 கடைகளில் இருந்தும் 10 கிலோ எடை கொண்ட பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலிதீன் பைகள் உபயோகித்த கடைகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று பாலிதீன் பைகள் உபயோகித்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சாிக்கை விடுக்கப்பட்டது.