குஜராத்: 'ரிவர்ஸ் பேங்க் ஆப் இந்தியா' என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

குஜராத் மாநிலம், சூரத்தில் 'ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்த 25.80 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2022-09-30 14:35 GMT

சூரத்,

குஜராத் மாநிலம், சூரத்தில் 'ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்த 25.80 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சூரத்தில் உள்ள காம்ரஜ் பகுதியில் ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 6 பைகளில், 25 கோடியே 80 லட்சம் மதிப்பிலான பணம் இருந்துள்ளது. இந்த பணம் முழுவதும் 2 ஆயிரம் நோட்டுகளாக இருந்துள்ளது. அந்த நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.

அந்த ரூபாய் நோட்டுகளில் 'ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா' என்பதற்கு பதில், 'ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா' என அச்சிடப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், போலி ரூபாய் நோட்டுகள் திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்