பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்து: குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கைது
பிரதமர் மோடிக்கு எதிராக கண்ணியக்குறைவாக பேசியதாக குஜராத் ஆம் ஆத்மி தலைவரை டெல்லி போலீசர் தடுப்புக்காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவரான கோபால் இடாலியாவை போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். பிரதமர் மோடிக்கு எதிராக கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ததாக தேசிய பெண்கள் ஆணையம் கோபால் இடாலியாவுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், டெல்லி போலீசார் அவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.