குஜராத்: சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் சிங்கம் தாக்கியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.
அம்ரோலி,
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வாவ்டி கிராமத்தில் இன்று மாலை 15 வயது சிறுவன் ஒரு பெண் சிங்கத்தால் கொல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராகுல் மெஸ்வானியா என்ற அந்த சிறுவன், கிராமத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத சாலையின் வழியாகச் சிறுவன் சென்றபோது ஒரு சிங்கத்தால் தாக்கப்பட்டார் என்று வன அதிகாரியான யோக்ராஜ்சிங் ரத்தோட் கூறினார்.
சிறுவனை கொன்ற சிங்கத்தை பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆசிய சிங்கங்களின் ஒரே வசிப்பிடமான குஜராத்தில், 2015 இல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கையானது 2020 இல் 674 ஆக 29 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.