கார் விபத்தில் அரசு ஊழியர் சாவு

நவலகுந்துவில் கார் விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.

Update: 2022-07-12 15:00 GMT

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் லோகநாத் குத்தலா(வயது 28). இவர், நவலகுந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து லோகநாத் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

நவலகுந்து தாலுகா காலவாடா கிராமம் அருகே உப்பள்ளி-விஜயாபுரா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென லோகநாத்தின் கட்டுப்பாட்டை இழந்து கார், தறிகெட்டு ஓடி சாலையோரம் உள்ள விளைநிலத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த லோக்நாத் உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நேற்று சிகிச்சை பலனின்றி லோகநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நவலகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்