இரு மாநிலங்களில் 21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம் - மத்திய அரசு தகவல்

ஜார்க்கண்ட், மேற்கு வங்க ட மாநிலங்களில் உள்ள பெண்களுக்கு 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Update: 2022-10-09 05:22 GMT

ராஞ்சி,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020-ம் ஆண்டு 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உட்பட பல தகவல்கள் திரட்டப்பட்டது. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆகும் பெண்களின் சதவீதம் 1.9-ஆக உள்ளது. மிக அதிகளவாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதன் அளவு 5.8 சதவீதமாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தை திருமணங்களின் அளவு ஊரக பகுதிகளில் 7.3 சதவீதமாகவும், நகரங்களில் 3 சதவீதமாகவும் உள்ளன.

கேரளாவில் எந்த பெண்ணுக்கும் 18 வயதுக்கு முன்பு திருமணம் ஆகவில்லை என கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் திருமணம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

21 வயதுக்கு முன்பு திரு மணமாகும் பெண்களின் தேசிய சதவீதம் 29.5 சதவீதமாக உள்ளது. இந்த அளவு மேற்கு வங்க மாநிலத்தில் 54.9 சதவீதமாகவும், ஜார்க்கண்ட்டில் 54.6 சதவீதமாகவும் உள்ளன.

அதேபோல் குற்ற சம்பவங் களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகளவில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பில்லி சூனியம் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலிக்க மறுத்த சிறுமி ஒருவர், கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவமும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. இங்கு 14 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு தூக்கிலிடப்பட்டார்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து தேசிய பெண்கள் மற்றும் குழந் தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இளம் பெண் ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்