காங்கிரசில் இருந்து விலகிய கவுரவ் வல்லப்...பா.ஜ.க.வில் இணைந்தார்

கவுரவ் வல்லப் காங்கிரசில் இருந்து தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் இன்று ராஜினாமா செய்தார்.;

Update:2024-04-04 13:48 IST

புதுடெல்லி,

மராட்டிய மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து காங்கிரஸ் சார்பில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த கவுரவ் வல்லப் தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் இன்று ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்பவர்கள் குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது. என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கவுரவ் வல்லப் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக டெல்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு சஞ்சய் நிருபத் இன்று சென்றுள்ளார். அங்கு அவரை பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்று அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

இந்நிலையில், கவுரவ் வல்லப் பா.ஜ.க. பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வல்லப் எழுதிய கடிதத்தில்,

நான் காங்கிரசில் சேர்ந்தபோது இளைஞர்கள், மூத்த நிர்வாகிகளின் யோசனைகளை மதிக்கும் நாட்டின் பழமையான கட்சி என்று நான் நம்பினேன், ஆனால் சில காலமாக, புதிய சிந்தனைகள் கொண்ட இளைஞர்களால் கட்சியில் அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று சில காலமாக உணர்ந்தேன். இளைஞர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன. திசையில்லா பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரசால் செயல்பட முடியவில்லை என கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்