மேற்கு வங்காளம் சிலிகுரியில் சரக்கு ரயில் தடம் புரண்டது

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் சரக்கு ரெயில் தடம் புரண்டது.

Update: 2023-06-14 18:45 GMT

சிலிகுரி,

மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் சரக்கு ரெயில் புதன்கிழமை தடம் புரண்டது. சிலிகுரியில் உள்ள நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையம் அருகே டாம்டிம்-என்ஜேபி-சிலாஹத்தி சரக்கு ரெயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

காலை 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து கதிஹார் பிரிவு கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் சஞ்சய் சில்வர்வார் உள்ளிட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து ரெயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியை தொடங்கினர். ரெயில் புதிய ஜல்பைகுரியில் இருந்து சிலிகுரி சந்திப்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்