டெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-17 10:42 GMT

புதுடெல்லி,

டெல்லியின் சராய் ரோஹில்லா (Sarai Rohilla) ரெயில் நிலையம் அருகே, படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில் ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரெயில் பெட்டிகள் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புத்தாள் சுருள்களை ஏற்றி வந்த இந்த சரக்கு ரெயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாக கூறப்படுகிறது. ரெயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் சில ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு சில ரெயில்கள் வேறு பாதையில் திருப்பி அனுப்பப்படுகின்றன.


Tags:    

மேலும் செய்திகள்