திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வார விடுமுறையான கடந்த 2 நாட்களில், திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், தற்போது கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால், பக்தர்கள் சிரமம் இன்றியும், வேகமாகவும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.