பிரதமர் மோடிக்கு தங்கத்தினால் ஆன நினைவுபரிசு

கர்நாடகம் வரும் பிரதமர் மோடிக்கு தங்கத்தினால் ஆன நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-06-19 21:14 GMT

பெங்களூரு:

சர்வதேச யோகா தினம் நாளை(செவ்வாய்க்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதையொட்டி மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் பிரமாண்ட யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் பிரதமர் மோடியும் யோகா பயிற்சி செய்ய உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் மைசூரு அரண்மனைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தினால் ஆன நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது. அந்த நினைவுப்பரிசு தயாராக உள்ளது. அந்த நினைவுப்பரிசை நேற்று மைசூரு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா வெளியிட்டார்.

அந்த நினைவுப்பரிசில் மைசூரு அரண்மனையின் முகப்பு தோற்றமும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், 'யோகா நகரமான மைசூருவில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுவது மகிழ்ச்சி. அதிலும் நீங்கள்(பிரதமர் மோடி) யோகா விழாவில் கலந்து கொண்டு மைசூருவுக்கு பெருமை சேர்ப்பதற்கு உங்களுக்கு எங்களுடைய இதயபூர்வ நன்றி' என்று தங்கத்தால் இந்தியில் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நினைவுப்பரிசை பிரதமருக்கு யார் வழங்குவார் என்று இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. அதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்