தொண்டையில் பரோட்டா சிக்கி பெண் சாவு
திடீர் என ஜானகியின் தொண்டைக்குள் பரோட்டா சிக்கிக்கொண்டது.;
பாலக்காடு,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தம்பி. இவரது மனைவி ஜானகி (வயது 68). நேற்று காலை ஜானகி தனது வீட்டில் பரோட்டா செய்து கணவருடன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். திடீர் என ஜானகியின் தொண்டைக்குள் பரோட்டா சிக்கிக்கொண்டது.
இதில் மூச்சுவிட முடியாமல் ஜானகி அவதிப்பட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜானகியின் மூச்சு குழாயில் பரோட்டா சிக்கியதால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.