"ஒன்றா...! இரண்டா...! 15 திருமணங்கள்" முதலிரவு முடிந்ததும் நகை-பணத்துடன் ஓட்டமெடுக்கும் திருமண திருடி சீமா

பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல கிடையாது. அது 2வதோ 3வத திருமணமும் அல்ல பூஜாவுக்கு இது 15 வது திருமணம்.

Update: 2022-05-28 11:01 GMT

போபால்

மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து இருந்தார். தனக்கு தெரிந்த நபர்களிடமும் உறவினர்களிடமும், திருமணத்துக்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொல்லி வைத்து இருந்தார்.

அதன்படி, தினேஷ் என்பவர், தனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார பெண் இருப்பதாகவும், அவர் பெயர் பூஜா என்றும் கூறினார். அதன்படியே ஒருநாள் பூஜாவை பெண் பார்க்க போனார் பிரசாத். பூஜாவை பிரசாத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. பூஜாவுக்கும் பிரசாத்தை பிடித்துவிட்டதால், தினேஷ் ஏற்பாட்டின்படி அந்த திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஊரே திரண்டு வந்து பிரசாத் தம்பதிகளை வாழ்த்தி விட்டு சென்றது.

இந்நிலையில், திருமணம் முடிந்து 8 நாட்கள் ஆனது. அப்போது திடீரென தினேஷின் மனைவி பூஜா போன் செய்து, தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி உள்ளார். உடல்நிலை சரியில்லை என்பதால், பிரசாத்தும் மனைவியை தினேஷ் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..

ஆனால் பூஜா போனது போனதுதான்... ! மீண்டும் வீட்டுக்கு வரவே இல்லை...! கணவர் பிரசாத்துக்கு போன் எத்வும் செய்யவில்லை. தினேஷ் வீட்டுக்கு சென்ற மனைவி என்ன ஆனார் என்று பிரசாத் பூஜாவுக்கு போன் போட்டார். ஆனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

ஒருவேளை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கலாம் என்று நினைத்து தினேஷுக்கு போன் செய்தார். தினேஷ் நம்பரும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. அப்போதுதான், பிரசாத்துக்கு சந்தேகம் வந்தது.

அந்த நேரம் பார்த்து யதேச்சையாக பீரோவை திறந்தால், பீரோவில் இருந்த பணம், தங்க நகைகளையும் காணோம்.. தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை பிரசாத் உணர்ந்தார். உடனடியாக உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு பூஜா மீது புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி பூஜாவை கைது செய்தனர்.

பின்னர் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-

உண்மையிலேயே அந்த பெண்ணின் பெயர் பூஜா கிடையாது. சீமா கான் என்பது நிஜமான பெயர். இப்போது பிரசாத்துடன் நடந்தது முதல் திருமணம் அல்ல கிடையாது. அது 2வதோ 3வத திருமணமும் அல்ல பூஜாவுக்கு இது 15 வது திருமணம். திருமண்ம் செய்து கொள்வது தான் அவரது தொழில்.

15 பேரை கல்யாணம் செய்து, 15 பேரிடமும் நகை, பணத்தை கொள்ளையடித்து ஓடிவந்துள்ளார் அந்த பெண். ரியா, ரெனி, சுல்லானா என்று ஒவ்வொரு கணவனிடம் ஒவ்வொரு பெயர்களுடன் நடமாடி உள்ளார்.

திருமணமமாகி கணவன் அசந்த நேரம் எஸ்கேப் ஆகி வந்துவிடுவாராம். பிரசாத்திடம் மட்டும் தான் சரியான சந்தர்ப்பம் கிடைக்காமல் ஒரு வாரம் தங்கியிருக்க வேண்டியதாகிவிட்டது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு திருமண மோசடிக்கும் தினேஷ், இந்த பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாய் தருவாராம்.

இதையெல்லாம் கேட்டு அதிர்ந்து போன கிரைம் பிரிவு போலீசார், இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்று விசாரணை மேற்கொண்டனர். லூட்டரி துல்ஹான் என்ற கும்பலில் 15 க்கும் மேற்பட்டவ்ர்கள் இருப்பது தெரியவந்தது. இதில் 3 பெண்கள் உள்ப்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேர் தலைமறைவாக உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்