எரிபொருள் கொள்ளை நாள்தோறும் தொடருகிறது - காங்கிரஸ் கண்டனம்

எரிபொருள் கொள்ளை நாள்தோறும் தொடருகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-19 21:51 GMT

புதுடெல்லி,

சமையல் கியாஸ் விலை நேற்று டெல்லியில் ரூ.3.50-ம், சென்னையில் ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமையல் கியாஸ் விலை , கடந்த 45 நாட்களில் ரூ.100 உயர்ந்துள்ளது. மீண்டும் ரூ.3.50 உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை 60 நாட்களில் ரூ.457.50 உயர்ந்துள்ளது. மீண்டும் ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி குடும்பங்களை சிலிண்டர் நிரப்ப முடியாத நிலைக்கு தள்ளிவிட்ட மோடி அரசின் எரிபொருள் கொள்ளை நாள்தோறும் தொடருகிறது.

விலையை சிறிய தவணையாகவோ அல்லது பெ ரிய தவணையாகவோ உயர்த்தி வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் கவலைப்படுகிறான். பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் கவலைப்பட மாட்டார்களா? கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,003. இருந்தாலும், அவுட் இல்லை. அனைத்து இல்லத்தரசிகள் சார்பில் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்