என்ஜினீயரிடம் ரூ.3.20 லட்சம் மோசடி
வீட்டை ஒத்திகைக்கு தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.3.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
மைசூரு-
வீட்டை ஒத்திகைக்கு தருவதாக கூறி...
மைசூரு டவுன் ஹெப்பால் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி சிங். இவர், தனது வீட்டை ஒத்திகைக்கு விடுவதாக ஓ.எல்.எக்.சில். விளம்பரப்படு்த்தி இருந்தார்.
இந்த விளம்பரத்தை மைசூரு நகர் பிருந்தாவன் லே-அவுட் பகுதியை சேர்ந்த என்ஜினியரான சந்தோஷ் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அவர், ஜெயலட்சுமி சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் வீட்டை ஒத்திகைக்கு வாங்க பல்வேறு தவணைகளில் ரூ.3.20 லட்சம் வரை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ஜெயலட்சுமி சிங், சந்தோசிடம் இன்னும் 15 நாட்களில் வீட்ைட தருவதாக கூறியுள்ளார்.
ரூ.3.20 லட்சம் மோசடி
ஆனால் 4 மாதங்கள் ஆகியும் அவர், சந்தோசுக்கு வீட்டை வழங்கவில்லை. இதனால் சந்தோஷ், அவரிடம் வாங்கிய பணத்தை தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி சிங், சந்தோசுக்கு ஒரு காசோலை கொடுத்து இருந்தார். ஆனால் அந்த காசோலை காலாவதியாகி இருந்தது தெரியவந்து. இதுபற்றி கேட்ட சந்தோசை, ஜெயலட்சுமி சிங் சாதி பெயர் கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது தான் சந்தோஷ் பணம் மோசடிக்குள்ளானதை அறித்தார். இதுகுறித்து அவர், ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.