காங்கிரஸ் கட்சியை ஜோதிமணி உட்பட 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அறிவிப்பு

மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-07-25 10:37 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ரம்யா ஹரிதாஸ்,, டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடமால் அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்.பிக்களும் பங்கேற்க கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்