ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
தகவலறிந்த மீட்ப படையினர் சீரமைத்து வருகின்றனர்.
ஆஜ்மீர்,
ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானின் ஆஜ்மீர்-சிலேதா எக்ஸ்பிரஸ் ஆஜ்மீர் ரெயில்வே யார்டு நோக்கி வந்து கொண்டிருந்தது.ஜோத்பூர் அருகே ராஜ்கியாவஸ்-பூமாத்ரா என்ற இடத்தில் ரெயில் தடம்புரண்டது. இதில் நான்கு பெட்டிகள் சேதமடைந்தன.
தகவலறிந்த மீட்ப படையினர் சீரமைத்து வருகின்றனர்.இந்த விபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை என ரெயில் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.