ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.;

Update:2024-02-02 14:50 IST

Image Courtesy : ANI

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார்.

இதனிடையே ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான ராஞ்சி சிறப்பு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று, ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்