காங்கிரஸ் முன்னாள் மந்திரி வீட்டில் வருமானவரி சோதனை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கங்காதர் கவுடா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கங்காதர் கவுடா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னாள் மந்திரி
தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக முன்னாள் மந்திரி கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் பிரமுகரான கங்காதர் கவுடா கட்சியின் மாநில துணை தலைவராகவும் இருந்துள்ளார்.
நேற்று காலையில் பெல்தங்கடி தாலுகாவில் பொது மருத்துவமனையையொட்டி அமைந்துள்ளது அவரது வீடு, பிரசன்னா நிறுவனம், இந்தபெட்டு பகுதியில் உள்ள வீடு உள்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடந்தது.
பரபரப்பு
இந்த சோதனையில் வட இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், சொத்துகள் குறித்து அதிகாரிகள் கேள்விகள் கேட்டு இருப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் மந்திரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.