இந்தூர்: உணவு டெலிவரி செய்யும் நபர் குத்திக்கொலை..!
இந்தூரில் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் டெலிவரி செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சொமேட்டோ உணவு டெலிவரி செயலியில் வேலை பார்க்கும் சுனில் வர்மா (வயது 20) என்ற இளைஞர் நேற்று இரவு உணவு டெலிவரி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வழிமறித்து கொள்ளையடித்து விட்டு சுனிலை 5 முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதையடுத்து சுனில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று காலையில் சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.