சார்மினார் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து - 5 பேர் காயம்

தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-01-10 05:57 GMT

ஐதராபாத்,

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை 9 மணியளவில் கடைசி நிறுத்தமான ஐதராபாத் நம்பள்ளி ரெயில் நிலையம் சென்றடைந்தது. நம்பள்ளி ரெயில் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் ரெயில் நிற்காமல் சற்று முன்னேறியதால் ரெயில் நிலைய சுவற்றில் மோதி மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், ரெயிலின் படிக்கட்டு அருகே நின்ற 5 பயணிகள் காயமடைந்தனர். காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்