ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முதல் குழு புறப்பட்டது..!
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களின் முதல் குழு காஷ்மீரிலிருந்து புறப்பட்டது.
ஶ்ரீநகர்,
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 145 காஷ்மீர் யாத்ரீகர்களைக் கொண்ட முதல் குழு, வருடாந்திர ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக மதீனாவுக்கு புறப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இன்று அதிகாலை ஹஜ் ஹவுஸ் பெமினாவிலிருந்து இந்த முதல் குழு ஸ்ரீநகருக்கு சொகுசுப் பேருந்துகளில் புறப்பட்டனர்.
முதல் குழுவில் மொத்தம் 145 யாத்ரீகர்கள் சென்றுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு தலா 145 பேர் கொண்ட குழுக்கள் மதீனாவுக்கு புறப்படுவார்கள். தொடர்ந்து 3-வது நாளில் இருந்து யாத்ரீகர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்று ஹஜ் கமிட்டி, செயல் அதிகாரி அபுல் சலாம் கூறினார்.
காஷ்மீரிலிருந்து சுமார் 6,000 பேர் ஹஜ் யாத்திரை செல்ல உள்ளனர். முன்னதாக, கடந்த மே 21 அன்று ஹஜ் ஹவுஸ் சார்பில் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் நோக்குநிலை பயிற்சி நிகழ்ச்சி நடத்தினர். இந்த நோக்குநிலை பயிற்சி நிகழ்ச்சிகள் ஹஜ் செய்வது பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும் தகவல்களை வழங்குவதற்கும் நடத்தப்பட்டன.