அக்னிபத் திட்டம் : நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு : கடற்படை தளபதி கருத்து
நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு என கடற்படை தளபதி கூறியுள்ளார் .
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து இந்திய கடற்படை தளபதி ஹரி குமார் கூறுகையில் ;
அக்னிபத் திட்டம் இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட திட்டம்.இதுபோன்ற போராட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை. போராட்டம் நடத்துபவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் என்று கூற விரும்புகிறேன்.அவர்கள் அக்னிபத் திட்டத்தை படித்து புரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சேவை செய்ய இது ஒரு வாய்ப்பு என கூறியுள்ளார் .