ஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து..!! 9 பேர் காயம் எனத் தகவல்
ஆக்ராவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்தனர்.;
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலத்தின் பிரோஸ்பூர் மற்றும் மத்தியபிரதேசத்தின் சியோனி இடையே படல்கோட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஆக்ரா ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது, ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீப்பிடித்த பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் அந்த பெட்டி ரெயிலில் இருந்து பிரிக்கப்பட்டு ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில், இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.