கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து..!!

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-06-14 17:30 GMT

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3C புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்படி, "டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது. 



Tags:    

மேலும் செய்திகள்