மத்திய பட்ஜெட் 2023-24 : முழு விவரம்...!

Update:2023-02-01 09:11 IST
Live Updates - Page 3
2023-02-01 04:56 GMT

பட்ஜெட் - பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்ஹ்டிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

2023-02-01 04:51 GMT

மத்திய பட்ஜெட் 2023-24: தடைகளை தகர்ப்பாரா? நிர்மலா சீதாரமன்...!

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசுகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி. அறிக்கை மற்றும் அதானி பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க கூடும்.

இந்த படத்தில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டு செல்வது போலவும், வழியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாறாங்கற்களை தடுத்து பிடித்து நிற்பது போலவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த தடைகள் முன்னே நிற்கிறது என வெளிப்படுத்தி உள்ளது.

2023-02-01 04:13 GMT

நாடாளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நிதியமைச்சக அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன்.நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.

2023-02-01 03:46 GMT

ஜனாதிபதியிடம் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் நிர்மலா சீதாராமன்...!

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இன்று பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் நிதித்துறையின் முக்கிய அதிகாரிகளும் ஜனாதிபதியுடன் சந்தித்தனர். பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுகிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஜனாதிபதியை சந்திப்பது நடைமுறை ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்