மத்திய பட்ஜெட்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி கடன் உத்தரவாத திட்டம், ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.;

Update:2023-02-02 04:46 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.

உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய திட்டம் தொடங்கப்படும்.

கடன் வழங்குவதற்கும், நிதி ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும்வகையில், தேசிய நிதி தகவல் பதிவகம் அமைக்கப்படும். நிதிஒழுங்குமுறை அமைப்புகள், தற்போதைய ஒழுங்குமுறைகளை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

இணையதளம்

உரிைம கோரப்படாத பங்குகள் மற்றும் லாப ஈவுத்தொகைகளை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப இணையதளம் தொடங்கப்படும்.

கம்பெனி சட்டத்தின்கீழ், படிவங்கள் தாக்கல் செய்யும் கம்பெனிகளின் குறைகளை விரைவாக பரிசீலிக்க மத்திய ஆய்வு மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்