மத்திய பட்ஜெட் 2023-24 : முழு விவரம்...!
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்திற்கு பட்ஜெட் ஆவணங்களுடன் புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில்,
50 ஆண்டுகளில் திருப்பிச்செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் என்றார்.
2025-26 நிதியாண்டுக்குள், நிதி பற்றாக்குறை விகிதத்ததை 4.5%-க்கும் கீழ் குறைப்பதே அரசின் நோக்கம்!
*மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு
* சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன
* உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை ஈர்க்கும் வண்ணம் நாடு முழுவதும் உள்ள 50 சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும்
*வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை
* பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும்
* மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி
* பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
* இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்
*நகர்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
* ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
* மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
* நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என கணிப்பு!
* ரூ10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
2023-24ஆம் நிதியாண்டில் ரூ12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
* தொலைக்காட்சி, செல்போன் கேமரா லென்ஸ் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.
* சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும்.
* மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு வரி விலக்கு"
தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கபடுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அதில்,
மகிளா சம்மான் என்ற புதிய சேமிப்பு திட்டம் உருவாக்கப்படும். பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7.5% வட்டி வழங்கப்படும். 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.
இளம் தொழில்முனைவோர்களின் வேளாண் திட்டங்களை ஊக்குவிக்க ஒரு விவசாய துரித நிதி அமைக்கப்படும். விவசாய துரித நிதியை விவசாய தொடக்கங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த வேண்டும்.
விவசாய துரித நிதி ஒரு நல்ல முன்னேற்றமாகும், இது இளம் தொழில்முனைவோருக்கு அரசாங்க விதிமுறைகளை வழிநடத்தவும், பண்ணை விநியோக சங்கிலி மற்றும் நெட்வொர்க்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களையும் இணைக்க உதவும். இந்தியாவின் விவசாய மதிப்புச் சங்கிலிகளில் உள்ள நாள்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் இது ஒரு கேம் சேஞ்சராக இருக்கலாம்.
விவசாய துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளங்காட்டியாக பான் பயன்படுத்தப்படும்
பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்த 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிபேடுகள், வாட்டர் ஏரோ டிரோன்கள், மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் புதுப்பிக்கப்படும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
2030-க்குள் 5 எம்எம்டி என்ற பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை எட்ட இலக்கு. ஆற்றல் மாற்றத்தை அடைவதற்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறதில் அதில்,
*அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்
* 38,800 ஆசிரியர்கள் புதியதாக பணிக்கு எடுக்கப்படுவார்கள், ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் மேம்படுத்தப்படும்"
*என்.ஜி.ஓ க்களுடன் இணைந்து டிஜிட்டல் நூலகத்தை வலுவுடன் கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும்.
*கர்நாடக மாநில விவசாயிகளுக்கான சிறப்பு திட்டம் அறிவிப்பு;
*கர்நாடகாவிற்கு ரூ. 300 கோடி வறட்சிக்கான நிதி ஒதுக்கீடு. கர்நாடக மாநில பாசன திட்டத்துக்கு ரூ. 5300 கோடி ஒதுக்கீடு"
*நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுன்னறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
*இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு
* கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்