விவாகரத்து வழக்கு தொடர்ந்த 5 தம்பதியினர் மீண்டும் இணைந்தனர்

விவாகரத்து வழக்கு தொடர்ந்த 5 தம்பதியினர் மீண்டும் இணைந்தனர்

Update: 2022-08-14 21:19 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 5 தம்பதியினர் சிறு பிரச்சினையால் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவகாரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் துமகூருவில் நேற்று முன்தினம் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் 5 தம்பதியினரும் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடம் நீதிபதிகள், வக்கீல்கள் சமரச முயற்சி மேற்கொண்டனர். இதன்பலனாக 5 தம்பதிகளும் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தனர். அதன்படி 5 தம்பதிகளும் மீண்டும் நீதிபதிகள் முன்னிலையில் மாலை மாற்றி வாழ்வில் ஒன்றாக இணைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்