திருப்பதி கோவில்களில் இந்த மாதம் நடக்கும் உற்சவங்கள்

10-ந்தேதி கோவிந்தராஜசாமி கோவில் சின்னவீதியில் உறியடி திருவிழா,

Update: 2023-09-02 20:23 GMT

திருமலை, 

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 7-ந்தேதி எஸ்.வி.கோசாலையில் கோகுலாஷ்டமி கோபூஜை, 9-ந்தேதி கோதண்டராமசாமி கோவிலில் உறியடி திருவிழா, 10-ந்தேதி கோவிந்தராஜசாமி கோவில் சின்னவீதியில் உறியடி திருவிழா, 11-ந்தேதி கோவிந்தராஜசாமி கோவில் பெத்தவீதியில் உறியடி திருவிழா.

கபிலேஸ்வரர் கோவிலில் விநாயக சவிதி நாளான 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா, கோவிந்தராஜசாமி கோவிலில் 24-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை பவித்ரோற்சவம், 26-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்