வேலைகிடைக்காது என அச்சம் - 8வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவன் தற்கொலை
வேலைகிடைக்காது என்ற அச்சத்தால் என்ஜினீரியங் மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு கம்பியூட்டர் சைன்ஸ்ஸ் பயின்று வந்தவர் அக்ஷய் அம்லொ மடிகொன்கர் (வயது 21).
இதனிடையே, கல்லூரி படிப்பு முடிந்த உடன் கல்லூரியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் (கேம்பஸ் தேர்வு) தனக்கு வேலை கிடைக்காது என அக்ஷய் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அக்ஷய் நேற்று தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த அக்ஷயின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.