மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு- ஆயிரக்கணக்கானோர் டெல்லியை அடைகின்றனர்

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2023-05-06 21:44 IST

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும், விளையாட்டு வீரர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மே 7 ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு வருவார்கள்.

நாளை பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்கத்தின் பல மூத்த தலைவர்கள், நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டத் தளத்திற்குச் சென்று மல்யுத்த வீரர்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்க உள்ளனர்.

மேலும், மே 11-18 வரை விவசாயிகள் சங்கம் அனைத்து மாநிலத் தலைநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் இந்தியா முழுவதும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்