நாடு முழுவதும் நாம் போராட்டத்தை நடத்தவேண்டும் - விவசாய சங்கத்தினருக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு

நாடு முழுவதும் நாம் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமென விவசாய சங்கத்தினருக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-05-22 14:04 GMT

சண்டிகர்,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக மத்தியில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நேற்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதயுடன் பேச்சுவார்த்தை நடத்திய சந்திரசேகர ராவ், தொடர்ந்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரசேகர ராவ் கூறுகையில், போராடும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். விவசாய தலைவர்களுக்கு எனது ஒரே கோரிக்கை என்னவென்றால் நாம் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும். பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் மட்டுமல்ல நாடு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். விவசாயிகள் நினைத்தால் அரசாங்கத்தையே மாற்றிவிடுவார்கள்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லி, பஞ்சாப் முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்