மறைந்த நடிகர் அம்பரீசுக்கு மண்டியாவில் கோவில் கட்டிய ரசிகர்கள்
மறைந்த நடிகர் அம்பரீசுக்கு மண்டியாவில் ரசிகர்கள் கோவில் கட்டினர்.
பெங்களூரு: கர்நாடக திரைஉலகில் பிரபல நடிகராக இருந்தவர் அம்பரீஷ். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் திடீரென இறந்தார். இதனால் அவரது ரசிகர்கள் உள்பட கன்னட திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் நேற்று நடிகர் அம்பரீசின் 70-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அம்பரீசின் சொந்த ஊரான மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா ஹொட்டேகவுடனதொட்டி கிராமத்தில் அவரது ரசிகர்கள் அம்பரீசுக்கு கோவில் கட்டி வந்தனர்.
நேற்று பிறந்தநாளையொட்டி அந்த கோவில் திறக்கப்பட்டு அங்குள்ள அம்பரீசின் சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த கோவிலை அம்பரீசின் மனைவியும், நடிகையும், சுயேச்சை எம்.பி.யுமான சுமலதா திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அம்பரீசுக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டி இருப்பது பெருமை அளிப்பதாக கூறினார்.