போலி லோக் அயுக்தா போலீசார் கைது

போலி லோக் அயுக்தா போலீசார் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-30 21:50 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு லோக் அயுக்தா போலீசார் எனக்கூறி கொண்டு ஞானேஷ் என்பவர் சென்றார். அவருடன் தாசில்தாரும் சென்றிருந்தார். ஞானேஷ் தான் லோக் அயுக்தா போலீசார் எனக்கூறி இருந்ததால், தாசில்தாரும் சென்றிருந்தார்.

அந்த வீட்டில் உள்ள ஆவணங்களை சரி பார்த்த போது தாசில்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அடையாள அட்டையை கொடுக்கும்படி ஞானேசிடம் கேட்டுள்ளார். உடனே அங்கிருந்து ஞானேஷ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த போலி லோக் அயுக்தா போலீசாரான ஞானேசை கைது செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்