சிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..! இந்திய அளவில் சென்னை மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை
சிஏ படிப்பு இறுதித் தேர்வில் சென்னை மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
புதுடெல்லி,
சிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது . மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புகளுக்கான இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://icai.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சிஏ படிப்பு இறுதித் தேர்வில் சென்னையை சேர்ந்த கல்பேஷ் ஜெயின் என்ற மாணவன் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.