பிச்சை கேட்பது போல் நடித்து கட்சி தலைவரை வெட்டிய மர்ம நபரால் பரபரப்பு

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரை சாமியார் வேடமிட்ட ஒருவர், பிச்சை கேட்பதைப்போன்று நடித்து, கத்தியால் வெட்ட முயற்சிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Update: 2022-11-17 11:13 GMT


அமராவதி,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பி. சேஷகிரி ராவ் என்பவர் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் வீட்டு வாசலில் சாமியார் வேடமிட்ட ஒருவர் அவரைக் கத்தியால் தாக்குவதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சாமியார் வேடமிட்ட ஒருவர் பிச்சை கேட்பதைப் போன்று சேஷகிரி ராவ்-இன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே வந்த சேஷகிரி ராவ், அந்த சாமியார் வேடமிட்டவருக்கு யாசகம் வழங்கும் போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயற்சித்துள்ளார்.

சேஷகிரி நிலைகுலைந்து விழும் வரை, அவரை கத்தியால் குத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு சேஷகிரி வீட்டினர் வெளியே வருவதற்குள், சாமியார் வேடமிட்டவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டார்.

தலையிலும், கழுத்திலும் பலத்த காயமடைந்த சேஷகிரி ராவ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவரை மர்ம நபர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்