பாஜக அரசு அனைவருக்குமான சேவையை வழங்கி வருகிறது: பிரதமர் மோடி பேச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Update: 2022-07-03 13:59 GMT

ஐதாராபாத்,

பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கானா மாநிலம் சென்ற பிரதமர் மோடி, ஐதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

தெலுங்கானா மக்கள் கடின உழைப்புக்கு பெயர் போனவர்கள். தெலுங்கானா மக்கள் திறமை மிக்கவர்கள். தெலுங்கானா அதன் கலாசாரம் மற்றும் வரலாற்று பெருமைக்காகவும் அறியப்படுகிறது. பாரதிய ஜனதாவின் இரட்டை என் ஜின் கொண்ட அரசாங்கம் மீதான நம்பிக்கை பிற மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதை நாங்கள் பார்க்கிறோம். தெலுங்கானாவில் கூட பாஜகவின் இரட்டை இயந்திர ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர்.

கொரோனா காலத்திலும் மத்திய அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்தது. தெலுங்கானாவிற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. பாஜகவிற்கான ஆதரவு மக்களின் அன்பால் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில்ல் பாஜக அரசு உள்ளது. அம்மநிலங்கள் முன்னேற்ற பாதையில் உள்ளன.

வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வதில் பெண்களின் பங்கு அதிகரித்து இருப்பதாக சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஊரக பகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருந்தது. பொருளாதார சொத்துக்களை தங்கள் பெயரில் வைத்திருப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக சர்வே கூறுகிறது. அவர்களை வங்கி அமைப்பில் இணைத்ததால் இது சாத்தியமானது

கடந்த 8 ஆண்டுகளில் ஏழைகள், தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக பல திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன்காரணமாகவே சமூகத்தில் அனைத்து பிரிவு மக்களுக்கும் எங்கள் அரசு மற்றும் அதன் கொள்கைகள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்