நாட்டின் பொருளாதாரத்தை கையாள பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகளை விமர்சகர்களும் பாராட்டுகின்றனர் - பாஜக

பொருளாதாரத்தை கையாள பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகள் சரியானவையாக மாறிவிட்டன என்று பாஜக தெரிவித்துள்ளது.

Update: 2022-07-31 15:07 GMT

புதுடெல்லி,

பொருளாதாரத்தை கையாள பிரதமர் மோடி அரசாங்கம் எடுத்த முடிவுகள் சரியானவையாக மாறிவிட்டன, அதன் விமர்சகர்கள் கூட அதை ஒப்புக்கொள்கிறார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.

ராய்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளது.ஆகவே இலங்கை, பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படாது என்றார்.

முன்னதாக கடந்த காலங்களில், அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் பற்றிய கவலைகளை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அடிக்கடி தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டி, அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட அதன் கொள்கைகளுக்கு "பாராட்டுதல்" தெரிவித்திருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் கூறினார்.

அத்துடன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன் கூறுகையில், சுதந்திரமான ஜனநாயகத்தையும் அதன் அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது, ஏனெனில் அது பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு அவசியம். இந்தியாவில் நிலவும் பெரும்பான்மைவாதம் ஆபத்தானது என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்