அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி கோரிக்கை நிராகரிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

Update: 2022-11-15 19:45 GMT

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஷ்ரா மற்றும் பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ந் தேதி ராஞ்சியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் தொடர் அரசு அலுவல்கள் காரணமாக 3 வார அவகாசம் கேட்டார். 17-ந் தேதி அவர் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இப்போது அவர் ஒரு நாள் முன்னதாக 16-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை ஏற்க அமலாக்கத்துறை மறுத்து விட்டது. இதனால் அவர் நாளை (17-ந் தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்