என்.எஸ்.இ முறைகேடு குறித்த அமலாக்கத்துறை வழக்கு - சிபிஐ சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவு

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.;

Update:2022-08-29 19:26 IST

புதுடெல்லி,

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றஞ்சாட்டியது. மேலும் நிதி மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்த தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்