வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு..!
வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 77 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.;
புதுடெல்லி,
வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 77 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த 28-ந்தேதி மின்சார பயன்பாடு மிக மிக அதிகமாக இதுவரை இல்லாத அளவில் இருந்ததாக மின் அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அரியானாவில் 28-ந்தேதி ஒரே நாளில் 77 ஆயிரத்து 91 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 737 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ராஜஸ்தானில் 15 ஆயிரத்து 850 மெகா வாட்டும் பஞ்சாப்பில் 14 ஆயிரத்து 2 மெகா வாட்டும் அரியானாவில் 12 ஆயிரத்து 540 மெகா வாட்டும் டெல்லியில் 7 ஆயிரத்து528 மெகா வாட்டும் மின்சாரத்தேவை இருந்துள்ளது. முந்தைய நாளான 27-ந்தேதி கிழக்கு மண்டலத்தில் 26 ஆயிரத்து 92 மெகா வாட் அளவுக்கு மின்தேவை ஏற்பட்டுள்ளது.