மேல்-சபையில் பட்டதாரி-ஆசிரியர் தொகுதிகளுக்கு தேர்தல்: 3 பேர் மனு தாக்கல்

மேல்-சபையில் பட்டதாரி-ஆசிரியர் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலையொட்டி முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-05-19 15:36 GMT

பெங்களூரு

3 பேர் மனு தாக்கல்

கர்நாடக மேல்-சபையில் வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி, கர்நாடக தெற்கு பட்டதாரிகள் தொகுதி, வடமேற்கு ஆசிரியர்கள் தொகுதி மற்றும் கர்நாடக மேற்கு ஆசிரியர்கள் தொகுதி ஆகிய 4 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆசிரியர்-பட்டதாரிகள் தொகுதிளுக்கான மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே ஜூன் மாதம் 3-ந் தேதி நடைபெறும். எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படும் 7 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிட இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

போட்டி இருக்காது

இதில் சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுக்கு 4 இடங்களும், காங்கிரசுக்கு இரண்டும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதனால் இந்த தேர்தலில் கட்சிகள் தங்களுக்குரிய இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்களை நிறுத்தம் என்பதால் போட்டி இருக்காது என்றே கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்