அரசு அதிகாரிகள் 2-ந்தேதி முதல் தபால் ஓட்டுகள் போட ஏற்பாடுகள்

சட்டசபை தேர்தலையொட்டி அரசு அதிகாரிகள் 2-ந்தேதி முதல் தபால் ஓட்டுகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-04-24 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் பணியில் போலீசார், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவதால் அவர்கள் தபால் ஓட்டுப்போட அனுமதி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 22-ந்தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் கர்நாடக அரசின் துணை ெசயலாளர் சஞ்சய் ஆலோசனை நடத்தினார். இதில் தபால் ஓட்டுகள் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் துணை செயலாளர் சஞ்சய் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், போலீசார், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தபால் ஓட்டுளிக்க தபால் ஓட்டு மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது வருகிற 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை இந்த மையம் செயல்படும். தேர்தல்பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் இந்த மையங்களில் தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்